விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எ.கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் 1990 முதல் 2026ஆம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் தாளாளர் கல்லூரியின் தற்போதைய வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், தற்போதைய மாணவிகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு முன்னாள் மாணவிகளின் வழிகாட்டுதலும் ஆதரவும் அவசியம் எனக் குறிப்பிட்டார் பேசினார் .

விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவிகள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்குச் சென்று அமர்ந்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, தங்களது பசுமை நிறைந்த கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த கல்லூரி நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் லட்சுமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். இயற்பியல் துறைத் தலைவி திருமதி. ஜெனிபர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி முன்னாள் மாணவிகளையும் கல்லூரியையும் மீண்டும் இணைக்கும் இனிய சந்திப்பாகவும், தற்போதைய மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு முன்னாள் மாணவிகளின் பங்களிப்பை வலுப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.





