• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நீலகிரி -மஞ்சூரில் கார் விபத்து இருவர் காயம் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 2 பேர் காயமடைந்துநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் முக்கிமலை சாலை முனீஸ்வரர் கோயிலில் அருகில் உள்ள பாலத்தில் சுமார் நேற்று இரவு 7.15 மணியளவில், TN 37 BL 4336 எண் கொண்ட மாருதி ஆல்டோ காரின் உரிமையாளர், தி.கார்த்திக் த/பெ காமராஜ், (வயது – 26) முக்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் தனது வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். அப்பொழுது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கார் பாலத்தில் மோதியுள்ளது.

காரில்,ஓட்டுநருடன் கார்த்திக், த/பெ முத்துசாமி (வயது. 20) முக்கிமலை பகுதியைச் சேர்ந்த என்பவரும் சென்றுள்ளார். இந்த விபத்தில் ஓட்டுநர் கார்த்திக், மற்றும் ஓட்டுநருடன் சென்ற கார்த்திக் என்பவருக்கும் சிறிய அளவு காயம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மஞ்சூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்