• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அதிமுகவுக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கீடு

Byவிஷா

Mar 27, 2024

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
முன்னதாக ஓபிஎஸ் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.