புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.அருணா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.11.2026) வெளியிட, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.இ.அபிநயா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திரு.காந்திராஜ் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.மு.காளீஸ்வரி (அறந்தாங்கி), திரு.கே.எம்.தமீம் ராசா அவர்கள் (இலுப்பூர்), மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ஷோபா அவர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ரவி அவர்கள், உதவி ஆணையர் (கலால்) திரு.ஸ்ரீதர் அவர்கள், வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அ.செந்தமிழ்குமார் அவர்கள், வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள்; மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
