• Mon. Apr 29th, 2024

40 தொகுதிகளும் திமுகவை ஆதரிப்போம் – நடிகர் கருணாஸ்

ByTBR .

Mar 21, 2024

“மத்தியில் பாஜகவை வீழ்த்த, மாநிலத்தில் அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது;

அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்;

மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க வேண்டும்;

‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது”

“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில், கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும்;

கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அதிமுகவை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்;

திமுகவிற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமுகவிற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்;

மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அதிமுகவை வீழ்த்த திமுக உடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்”- என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், நடிகருமான கருணாஸ் அறிக்கைவெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *