• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுவிலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி – துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி…

மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. இதில், மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் “மதுப்பழக்கத்தை மறப்போம். மனிதனாக இருப்போம், மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு, இளைஞர்களே மது அருந்த செல்கிறீர்களா? மரணத்தை அழைக்க செல்கிறீர்களா?, மதுவினால் உயர்ந்தவர் எவரும் இல்லை… வீழ்ந்தோர் பலர் நினைவில் கொள்வோம்” என்று மதுவுக்கு எதிரான நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதன்பின்பு ஏராளமானோர் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.