இந்தியாவில் 100 கோடிப் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கொண்டாடும் வகையில் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 100 வடிவிலான மாணவர்கள் நின்று பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்தியாவில் கொரானா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாதியாகக் குறைந்துள்ளது.

மேலும் இதனை மேலும் குறைக்க மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தை அறிவித்து அதனை பட்டி தொட்டிகளில் எல்லாம் கொண்டு சேர்த்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீத தடுப்பூசி இலக்கு வைக்கப்பட்டு தற்போது தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் பயனாக இந்தியாவில் மொத்தம் இதுவரை 100 கோடிக்கு மேலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வை பொது மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையிலும் மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள ஜெயராம் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து 100 வடிவில் நின்று பாரத பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இதற்காக உழைத்த அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தங்கள் நன்றியை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் மக்கள் தொகையில் 100 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டது பெருமை அளிப்பதாகவும், இதற்காக பாடுபட்ட நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக அனைவரும் குரல் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.