

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்ஸி) தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,
கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று பிரீத்தி சூதனின் பதவிக்காலம் முடிந்த பிறகு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்ஸி) தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அஜய் குமாரின் நியமனத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்துள்ளார்.
1985-ம் ஆண்டு ஓய்வு பெற்ற இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) கேரள கேடர் அதிகாரியான அஜய் குமார், ஆகஸ்ட் 23, 2019 முதல், அக்.31, 2022 வரை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார் என்று அவரது சேவை பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

