• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜூலை 3 முதல் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமல்

Byவிஷா

Jun 28, 2024

நேற்று ஜியோ நிறுவனம் தனது கட்டணத்தை உயர்த்திய நிலையில், இன்று ஏர்டெல்லும் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்து அறிவிப்பபை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இன்று பாரத் ஏர்டெல் நிறுவனமும் தங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த விலை உயரத்தப்பட்ட கட்டணமானது வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, 11 சதவீதம் முதல் 21 சதவீதம் வரையில் இந்த விலையேற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரம்பற்ற வாய்ஸ் கால் ரீசார்ஜ் ஒருமாதத்திற்கு 179 என நிர்ணயிக்கப்பட்ட கட்டணமானது, 199ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் 455இல் இருந்து 509ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் கட்டணம் 1799இல் இருந்து 1999ஆக உயர்ந்துள்ளது.
கூடுதல் 1ஜிபி கட்டணம் 19இல் இருந்து 22ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் 2ஜிபிக்கான கட்டணம் 29இல் இருந்து 33ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4ஜிபிக்கான கட்டணம் 65இல் இருந்து 77ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல மற்ற ரீசார்ஜ் பிளான்களிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.