• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மின் கம்பி மீது மோதிய விமானம்
அதிர்ஷ்டவசமாக 2பேர் உயிர் தப்பினர்

அமெரிக்காவில் மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது விமானம் மோதியது. அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்.
இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது நேற்று இரவு சிறிய ரக விமானம் மோதியது. 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மின் கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. விமானம் மோதியதால் மின் இணைப்பு தடைபட்டது. இதனால், 1 லட்சம் வீடுகள், தொழில்நிறுவனங்களில் மின் இணைப்பு தடைபட்டது. இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விமானத்தில் சிக்கிய 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், விமானம் மோதியதால் இருளில் மூழ்கிய நகருக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.