ஆக்கிரமிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதங் கோயில் பாலம் அவதிப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்லக்கூடிய பிரதான முக்கிய பாதையாக இருந்து வருவது மாதா கோயில் பாலம், இப்பாலம் பொதுப்பணித்துறையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இப்பாலத்தில் இடது புறம் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டிட கழிவுகள், இதர பயன்படுத்த முடியாத பழைய பொருட்கள், சிமெண்ட் மண் மணல் ஆகியவைகள் குவிக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுவது இல்லாமல் மேலும் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கிறது.
இவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் விரைவில் ஆக்கிரமாப்புகள் அகற்ற வேண்டும் நகரின் முக்கிய நீர்வழி பாதையாக அமைந்திருக்கும் மாதாங்கோயில் பாலம் அனைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இப்பகுதியில் இருந்து ஏராள மக்கள் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வருவதற்கு மிகவும் பயனுள்ள பாதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .