• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் ரூ.12 கோடி ஒதுக்கீடு -ப.மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

ByKalamegam Viswanathan

Feb 27, 2023

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு வெறும் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. என ப.மாணிக்கம் தாகூர் எம்.பி.பேச்சு


மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சமீபத்தில் வெளியான ஆர்டிஐ தகவலில் மதுரை எய்ம்ஸ்க்கு 12 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இது குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில்:மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு வெறும் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய மோடி அரசு தமிழ்நாட்டையும் குறிப்பாக தென்மாவட்ட மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கின்றது.