கூடலூர் அடுத்த அல்லூர்வயல் பகுதியில் காட்டு யானை தாக்கிய இறந்தவரின் உடலை வைத்து சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஊர்மக்கள்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தொரப்பள்ளி ஒட்டி உள்ள அல்லூர்வயல் பகுதியல் குடியிருப்பவர் கரும்பன் (75) இவர் தன் வீட்டிலிருந்து சாலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அங்கு மூங்கில் புதர்களில் இருந்த காட்டு யானை இவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இவர் பலியானார். இதை அடுத்து அக்கமக்கத்தினர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்து காட்டு யானை வனப்பகுதிக்கு சென்று விட்டது. இப்பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றது. சாலை இருபுறமும் செடிகள் அதிகம் உள்ளதால் எதிர்வரும் விலங்குகள் வருவது அறியாமல் உள்ளதாகவும் இரவு நேரங்களில் இப்பகுதியில் கடந்து செல்வதற்கு தெருவிளக்கு இல்லை என்றும் இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் இப்பகுதி உள்ள மக்கள் பகுதிக்கு காட்டு யானை உள்ளே துலையாதவாறு அகழி அமைக்கவும் இப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையாக வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதிரதுல்லா வட்டாட்சியர் சித்துராஜ் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் கோரிக்கைகளை ஏற்ற பின்பு உடலை எடுக்க விடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது.