• Wed. Mar 29th, 2023

அதிமுக ஆட்சி அமைப்பேன்… நான் தான் பொதுச்செயலாளர்.. சசிகலா பேச்சு…

Byகாயத்ரி

Jul 8, 2022

தற்போது நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன் என சசிகலா பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர ஈபிஎஸ் தரப்பு முயன்ற நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறினர். இதனைத்தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா தற்போது நான் தான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன் என சசிகலா பேட்டியளித்துள்ளார். இது குறித்து விரிவாக அவர் தெரிவித்ததாவது, அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டபடி நான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் தெளிவான மனநிலையோடு இருக்கிறார்கள். விரைவில் அதிமுக ஆட்சி அமைப்பேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *