• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…


அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளதை கொண்டாடும் வகையில் உதகை காபிஹவுஸ் சதுக்கம் மற்றும் மணிகூண்டு பகுதியில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் அதிமுக தொண்டர்கள் மேள தாளங்களுடன், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.இந்த கொண்டாட்டத்தில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே. அர்ஜுணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.