மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்தவர் முத்து, வீட்டின் அருகிலேயே கூடாரம் அமைத்து நாட்டு சண்டை சேவல்கள் மற்றும் நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார்.,

அடிக்கடி சேவல் சண்டை போட்டிகளுக்கும் சென்று அந்த போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளையும் பெற்று வந்த இந்த சண்டை சேவல்களுக்கு மதிப்பும் அதிகமாகவே இருந்ததாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் நேற்று இரவு இந்த கோழிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் சண்டை கோழிகள் இருந்த கூடாரத்திற்குள் புகுந்து கோழிகளை கடித்து கொண்டிருந்தை கண்டு நாய்கள் கூட்டத்தை விரட்டிவிட்டு பார்த்த போது 20க்கும் மேற்பட்ட சண்டை சேவல்களை கடித்து கொன்றுவிட்டு சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.,

இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசாரும் நேரில் வந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
20க்கும் மேற்பட்ட சண்டை கோழிகளை நாய்கள் கூட்டம் கடித்து கொன்ற சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,



