மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக தொடர் மழையால் வீட்டை இழந்த கல்லுப்பட்டி அதிமுக செயலாளருக்கு திமுக சார்பில் நிவாரணம் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க .ஸ்டாலினுக்கு நன்றி.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க .ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மக்கள் சபை கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று அதற்கு தீர்வு காண வேண்டுமென உத்தரவின்பேரில் மதுரை தெற்கு மாவட்டம் திமுக சார்பாக டீ. கல்லுப்பட்டி பகுதியில் தெற்கு மாவட்டச் செயலாளர் மு .மணிமாறன் தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கருப்பையா அதிமுக வெங்கடாசலபுரம் கிளைச் செயலாளர் வீடு தொடர் மழையால் வீட்டின் மேல் கூரை இடிந்து விட்டது அவரது மனைவி ராஜாமணி இறந்துள்ள நிலையில் எனவே எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் ராம்கண்ணன் நிவேதாதேவி பிளஸ் டூ படிக்கும் மாணவ மாணவிகள் தங்கள் தந்தை தாய் இறந்து விட்டனர் தாய் தந்தையை இழந்து எங்கள் பாட்டி வீட்டில் வசித்து வருகிறோம் படிப்பு செலவுக்கு நிதி உதவி செய்யுமாறு மனு அளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் அதிமுக கிளைச் செயலாளர் கருப்பையாவுக்கும் உரிய அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் திமுக சார்பாக 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் தாய் தந்தையை இழந்து வாழும் பள்ளி மாணவ மாணவிக்கு திமுக சார்பாக 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு குழந்தைகள் படிப்பு செலவுக்கு அரசு சார்பாக உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நிதி உதவி பெற்று கொண்ட அதிமுக கிளைச் செயலாளர் கருப்பையா தமிழக முதல்வருக்கு நன்றி.