

கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினரால் பரபரப்பு. மேலும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி காவல் உதவி ஆணையாளர் ரகுபதிராஜாவிடம் புகாரளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், மத கலவரத்தை தூண்டும் விதமாகவும், சமூக விரோதிகள் யாரோ முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக அவரது புகைபடத்தையும் அதன்கீழ் தீவிரவாதி என்ற வாசகத்துடன் கூடிய துண்டு போஸ்ட்டர்களை கோவைபுதூர் பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இதையறிந்து கொதித்துபோன அதிமுக தொண்டர்கள் அந்த போஸ்ட்டர்களை கிழித்து அப்புறப்படுத்தியதுடன், 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளர் மதனகோபால் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இது போன்ற சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீதும், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குனியமுத்தூர் காவல் உதவி ஆணையாளர் ரகுபதி ராஜாவிடம் புகார் அளித்தனர்.
இதற்கு முன்பும் இதுபோல் நடந்த சம்பவம் குறித்து புகாரளித்த நிலையில் உதவி காவல் ஆணையாளர் ரகுபதிராஜா முறையாக விசாரிக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியம் காட்டியதால் சமூக விரோதிகள் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையின் இந்த அலட்சியத்திற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கழக வழக்கறிஞர்கள் மாணிக்கராஜா, சிவக்குமார், முத்து இளங்கோவன், குனியமுத்தூர் பகுதிகழக அவைத்தலைவர் எஸ்.எம். உசேன் மற்றும் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு புகார் அளித்தனர்.

