

முல்லைப் பெரியாறு அணையின்விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்ததாக திமுக அரசு மீது குற்றம் சாட்டி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதிமுக தலைமை அறிவித்தது அதன்படி மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மதுரை அதிமுக சார்பில் மதுரை தினமணி தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுக அனைத்து நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிரான கோஷங்கை எழுப்பினர்.
