• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோயிலில் அதிமுகவினர் பிரசாதத்திற்காக எம்.எல்.ஏ முன் தள்ளுமுள்ளு

ByKalamegam Viswanathan

May 13, 2023

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிமுகவினரால் கோவில் பிரசாதத்திற்காக எம்எல்ஏ முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி முடிந்ததற்கு பின் பிரசாதம் வழங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. எம்எல்ஏ மற்றும் உடன் உள்ளவர்களுக்கு பிரசாதம் வழங்கும் போது அதிமுகவினர் பிரசாதம் பாக்கெட்டுகளை வாங்க ஒரு ஒருவரையும் முண்டியடித்து சலசலப்பையும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முகம் சுழிக்கும் வகையிலும் தள்ளு முள்ளு நடத்தி பிரசாத பைகளை பெற்றுக்கொண்டனர்.