• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByRadhakrishnan Thangaraj

Feb 13, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு .இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கு நோக்கத்தில் செயல்படும் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திமுக அரசை கண்டித்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் என் கிருஷ்ணராஜ் தலைமையில் கூட்டணி கட்சி கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக இணை செயலாளர் அழகுராணி.
வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன். தெற்கு நகர செயலாளர் பரமசிவம் .வடக்கு ஒன்றிய செயலாளர் குருசாமி. தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம் .மேற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியான் . செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர்
அங்குதுறை பாண்டியன். சேத்தூர் பேரூர் கழகச் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன் .உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் பொழுது மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கிராம பகுதி மக்களுக்கு உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.