• Wed. Apr 17th, 2024

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் அரசினர் விருந்தினர் மாளிகை ஊழியர் மீது தாக்குதல்…

தோவாளை அரசினர் விருந்தினர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் மற்றும் அவரது மனைவியை கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையிலான கும்பல் தாக்கியதாக வழக்கு பதிவு. ஆரல்வாய்மொழி போலீசார் நடவடிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தற்காலிக அரசு ஊழியராக பணியாற்றி வருபவர் நடேசன். தோவாளை அரசினர் விருந்தினர் மாளிகையில் கடந்த 16ம் தேதி வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவருடன் இருந்த அதிமுகவினர் 8 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அப்போது அங்கு வந்த நடேசனின மனைவி பிரேமா தட்டி கேட்டபோது, அவரையும் தாக்கியதாக தெரிகிறது. இச்சம்பவத்தில், பிரேமாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் செயின் பறிபோனதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வழக்கில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட எட்டு பேர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் 147,294,323,506,297.மனபோன்ற ஜந்துபிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வழக்குபதிவு செய்தவர்களை இது வரையிலும் போலீசார் கைதுசெய்யவில்லை என பாதிக்கபட்ட நபர் குற்றசாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *