விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், திறன்மிகு வகுப்பறைகள் துவக்கப்பட்டன.
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னாவித் தோட்டம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளி, அம்மன் கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளிலும் தலா 10 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. இந்த வகுப்பறைகள் குளிர்சாதன வசதியுடன் இணையதள வசதி, கணினிகள், தொடுதிரை இயந்திரம், கலந்துரையாடல் நடத்தும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதி பள்ளிகளில் உள்ள இந்த திறன்மிகு வகுப்பறைகளை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் சாகுல்ஹமீது, உதவி பொறியாளர் அழகேஸ்வரி, மண்டலத் தலைவர் சேவுகன், பள்ளி கல்விக்குழு தலைவர் ஸ்ரீநிகா, மாமன்ற உறுப்பினர்கள் ரவிசங்கர், சசிகலா, ஜெயராணி மற்றம் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.