• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அதிமுக தான் என் உயிர் மூச்சு … சசிகலா பேச்சு!

ByP.Thangapandi

Feb 24, 2025

யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம், அதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் என உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா பேசினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மைதானத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா-வின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிக்கலா தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிக்கலா..,

உசிலம்பட்டி அன்பு என்றும் மாறாததது. புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த போது முதல் தேர்தல், திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் அதில் மகத்தான வெற்றியை தந்தீர்கள்.

அந்த வகையில் புரட்சி தலைவர், புரட்சி தலைவி மீது அன்பு கொண்ட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அன்று சுயேட்சை சின்னமாக இரட்டை இலை தேர்தலில் நின்ற போது, அமோக வரவேற்பு அளித்து இந்த உசிலம்பட்டி மக்கள் வெற்றி பெற செய்தனர் .,

தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமர நிறைந்திருப்பவர்கள் புரட்சி தலைவர் எம்ஜீஆர்-ம், புரட்சி தலைவி அம்மாவும். ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் கொடுத்துள்ளனர்.

ஆனால் திமுக மக்களை கசக்கி புளிகிறது. இப்போது திமுக அரசு எதையும் செய்வதில்லை. தற்போது வரை எதும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்கின்றனர். காவேரி நதிநீர் மற்றும் முல்லை பெரியாறு அணைக்கு மத்திய அரசுடன் இணைக்கமாக உரிய தீர்வு ஏற்படுத்தினார் அம்மா.

ஆனால் திமுக மத்திய அரசுடன் குடும்ப சுயநலத்திற்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மக்கள் தான் பாதிப்படைந்து வருகிறார்கள். வரும் தேர்தலில் விளம்பரத்தை வைத்து ஆட்சிக்கு வந்து விடலாம் என பகல் கனவு கண்டு வருகின்றனர்.

பெண்கள் வாழ தகுதி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. ஆனால் அப்பா வேசம் போட்டு வருகிறார். சமீபத்தில் துணை ஆணையர் அலுவலகத்திலேயே அசம்பாவிதம் அரங்கேறியது. திமுகவின் வேசம் கலையும் நேரம் வந்துவிட்டது.

அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பொது நலத்துடன் செயல்பட வேண்டும் என அனைத்து மக்களும் எண்ணுகின்றனர்.

காலை பிடித்து மேல வந்தது குறித்தும், பின் பக்கம் வந்தவர்களை மிதித்து தள்ளினார் என சிலந்தி கதை. யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

அனைவரின் எண்ணத்தையும் ஈடேற்றும் வகையில் ஒன்றிணைவோம் என இந்த நாளில் உறுதி ஏற்போம். அதிமுக தான் எனது உயிர் மூச்சு, இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம்.

ஒன்றிணைக்கும் முயற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன்.,எழுந்து நடந்தால் இமையமும் நம் காலடியில் என பேசினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் விழா ஏற்பாட்டில் பங்கு வகித்தது. கூட்டத்தை கூட்டியதில் பங்காற்றிய ஒபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், அமமுக வின் முக்கிய நிர்வாகிகள் இவ்விழாவில் இறுதி வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.