• Wed. May 8th, 2024

சோழவந்தான் மன்னாடி மங்கலம் பகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

ByN.Ravi

Apr 4, 2024

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் கொரியர் கணேசன் அறிவுறுத்தலில், மன்னாடிமங்கலம் தெற்கு வடக்கு மற்றும் கல்லாங்காடு ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று அதிமுகவினர் வாக்குகள் சேகரித்தனர். இதில், கிளைச்செயலாளர்கள் மகளிர் அணியினர் அதிமுகவின் பிற அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறுவர்கள் ஆவலாக அதிமுகவும் வாக்கு சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *