• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்கூட்டம்

ByK Kaliraj

Mar 2, 2025

அதிமுக பொதுச்செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான *எடப்பாடியார் ஆலோசனையின் பேரில்,

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பாக பாலவநத்தம் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் .பொதுக்கூட்டத்தில்கழக மகளிரணி செயலாளர் செயலாளர்கீர்த்திகாதலைமை கழக பேச்சாளர் கருணாநிதி சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராஜவர்மன்,அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான .சுப்பிரமணியன், மகளிரணி துணை செயலாளர் மணிமேகலை,ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கிளை,வார்டு கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கரலிங்கம் செய்திருந்தார்.