• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றி அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்!..

ராணிப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 8 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

இவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்த்லில், கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்தினாலேயே இந்நபர்கள் மீது கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை செய்யப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகவும், இவர்களுடன் அதிமுகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளனர்.