• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் சிறந்த முதல்வர் – பாராட்டு மழையில் முதல்வர் ஸ்டாலின்!..

சென்னை வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மரியாதை நிமித்தமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய குலாம் நபி ஆசாத், கொரோனா சூழல் காரணமாக சென்னை வர முடியாத சூழல் இருந்ததாக கூறினார். மேலும், நாட்டின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் கடுமையான உழைப்பாளி எனவும் புகழாரம் சூட்டினார். இந்த சந்திப்பின்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், டி.கே.எஸ்.இளங்கோவனும் உடனிருந்தனர்.