• Thu. Jul 17th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு

Byவிஷா

May 31, 2025

மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், இன்று அது தொடர்பான தங்களின் நிலைபாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 பேர் யார்? என்ற கேள்வி நிலவி வருகிறது. இந்நிலையில், தேமுதிக சார்பில் இருந்து எம்பி சீட் கேட்டு நெருக்கடி தொடர்வதால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், இன்று அது தொடர்பான தங்களின் நிலைபாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது
முன்னதாக, தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த், ”தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினால்தான் பொதுமக்கள் நம்புவார்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.