• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByK Kaliraj

Feb 14, 2026

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஸ்டாலின் அரசை கண்டித்து 500க்கும் மேற்பபட அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய கழகச் செயலாளர்கள் நகர கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பாரதிய ஜனதா கட்சியினர்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு ஸ்டாலின் அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் மற்றும் மகளிர் அணியினர் கட்சி நிர்வாகிகள் 500க்கும் அதிகமான கலந்து கொண்டனர்.