• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது…

ByP.Thangapandi

Jan 1, 2024

ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது., பெரும்பாலான மக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும், பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்., அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை 1500 ரூபாய்க்கும், பிச்சி 500 ரூபாய்க்கும், முல்லை 600 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று பூஜைக்கு பயன்படுத்தக் கூடிய அரளி 200 ரூபாய்க்கும், செண்டு பூ 70 ரூபாய்க்கும், கோழிக் கொண்டை 60 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், துளசி 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.