• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆ..ஆ…குளிருதே: நீர் பனிப்பொழிவில் உதகை

Byவிஷா

Nov 23, 2024
நீலகிரி மாவட்டம், உதகையில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், ஆ…ஆ..குளிர் தாங்க முடியலையே என்று நெருப்பை மூட்டி அங்குள்ள மக்கள் குளிர்காய்கின்றனர். 
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீர் பனி, உறை பனியின் தாக்கம் இருக்கும். நடப்பாண்டு பருவமழை அதிகம் பெய்த நிலையில், தற்போது பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று நீர் பனி கொட்டியது. நீர் நிலைகள் அருகேயுள்ள புல்தரைகள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட். குதிரைப் பந்தய மைதானம், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனி அதிகம் காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் லேசான உறை பனியும் காணப்பட்டது. இதே போல, சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவுவதால், உதகையில் நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர்.