கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கன மழையால் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேல் நெல் மற்றும் வாழை விவசாயம் பாதிப்பு விவசாய நிலங்கள் அனைத்தும் மழை வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது இதனால் அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ள நிலையில் அணைகளில் இருந்து பல ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பதனால் இந்த தண்ணீரானது விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட நெல் ,வாழை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான தென்னந்தோப்புகளும் மழை வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த மழை தொடரும் பட்சத்தில் அதிக சேதங்கள் ஏற்படும் என விவசாயிகள் வேதனையோடு காணப்படுகின்றனர்.