கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முந்தின நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக தோவாளை தாலுகா பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக நெல்லை – நாகர்கோவில் இடையே போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் IPS அவர்கள் தோவாளை பெரியகுளம் மழை சேதப்பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதபடுத்த காவல்துறையினர்க்கு அறிவுரை வழங்கினார்.