• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட 23வது மாநாடு

மீன்பிடி தொழிலை பாதுகாக்கவும், சுற்றுலா தொழில்களை மேம்படுத்தவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட 23வது மாநாடு நடைபெற்றது.

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் மாநாட்டை துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துராமு, எம்.சிவாஜி, மாவட்ட செயலாளர் வி.காசிநாததுறை, தாலுகா செயலாளர் ஜி.சிவா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் தலைமைக்குழு தேர்வு செய்யப்பட்டது. மேலும் மீன்பிடித் தொழிலை பாதுகாக்கவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.