• Tue. Apr 30th, 2024

விஜய்வசந்த்-க்கு கூட்டணி கட்சியினர்களுடன் கடைசி நேரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் அவருக்கு பொதுமக்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இன்றைய பிரச்சாரத்தை குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை துவங்கினார் மண்டைக்காடு பகுதிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த்திற்க்கு செண்டை மேளதாளங்கள் முழங்க ஆளுயர மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் சிலம்பாட்டம் நடத்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ,குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜி பிரின்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, திமுக மாநில மீனவர் அணிச் செயலாளர் ஸ்டாலின்,பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளர் ராமசுப்பு, உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் முன்பு துவங்கிய இந்த பிரச்சார பயணம் கோவில் சுற்றுப் பிரகாரம் வழியாக கடற்கரை கிராமங்களிலும், மணலிவிளை, காட்டுவிளை, கருமன்கூடல், சேரமங்கலம், மணவாளக்குறிச்சி, ஆண்டாள்விளை, செங்குழி, துறைமுகம், ஈத்தங்காடு, வெள்ளி சந்தை, வெள்ளமடி, பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பரப்பரையின் போது வாக்கு சேகரித்த வேட்பாளர் விஜய் வசந்த்..,

நமது நாட்டை பிளவுபடுத்தும் ஆதிக்க சக்திகள் இடம் இருந்து நாட்டை மீட்க ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வருகின்ற 19ஆம் தேதி நீங்கள் அனைவரும் மறக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று உங்களது பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாசிச பாஜகவின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து நாட்டை மீட்கும் வாக்குகளாக இருக்க வேண்டும்.

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான இறுதி கட்டத்தில் நாம் இருக்கின்றோம் ஆகவே நீங்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் இது உங்களுடைய ஜனநாயக கடமையாகும். இந்தத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.

நாடு அமைதியான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையோடு பாசத்தோடு வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும். பாஜகவினர் பொய் பிரச்சாரத்தை முன்வைத்து உங்களிடம் வாக்கு கேட்பார்கள் அதற்கு நீங்கள் ஒருபோதும் ஏமாந்து விடக்கூடாது பத்தாண்டு காலம் அவர்கள் பொய் வாக்குறுதிகளை கொடுத்து நம்மை அதிக அளவில் ஏமாற்றி விட்டனர் மீண்டும் நாம் அவர்களின் பொய்வாக்குறுதிகளை நம்பக் கூடாது.

கடந்த 5 ஆண்டுகளில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நானும் எனது தந்தையும் தொடர்ந்து போராடி பல்வேறு தடங்கலுக்கு மத்தியிலும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் வளர்ச்சிக்கான பல திட்டங்களுக்கான முயற்சிகளையும் எடுத்துள்ளோம்.

பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர் அமைச்சராக இருந்த பொழுது நான்கு வழி சாலை பணிகளை காராணம் காட்டி நமது மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் நான்கு வழிச்சாலை பாதையில் உள்ள குளங்களை மண் கொட்டி மூடி நமது மாவட்டத்தின் இயற்கை வளத்தை அழிக்க நினைத்தார்.

ஆனால் தற்போது நான் மத்திய அரசிடம் போராடி நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வழிச்சாலை பணிகளை மீண்டும் தொடங்க முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டுள்ளேன் நான்கு வழிச்சாலை செல்லும் குளங்கள் உள்ள பகுதியில் மேம்பாலங்கள் அமைத்து குளங்களை இயற்கை பொலிவுடன் அதே நிலையோடு இருக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக பக்கத்து மாவட்டத்திலிருந்து கல் மண் எடுப்பதற்கான அனுமதியை நான் நமது முதலமைச்சருடன் கோரிக்கை வைத்து அனுமதி வாங்கினேன் மேலும் மத்திய பாஜக அரசிடம் பல தடங்கலுக்கு பிறகு போராடி 1041 கோடி ரூபாய் நீதியை பெற்று தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து செயல்படும் பாஜகவை போல் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக 141 கோடி ரூபாய் நிதியை பொன் ராதாகிருஷ்ணன் பெற்று வந்ததாக பொய்யான தகவலை தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சென்னை முதல் திருநெல்வேலி வரை அறிவிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து தற்போது நாகர்கோவில் வரையிலும் அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதை பணிகள் நிறைவடைந்த உடன் கன்னியாகுமரி வரையும் நீட்டிக்க அனுமதி பெற்றுள்ளேன் தற்போது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை மக்கள் பயன்பாட்டிற்கு ஓடிக் கொண்டிருக்கின்றது இந்தத் திட்டத்தையும் பாஜக வேட்பாளர் திரு பொன் ராதாகிருஷ்ணன் கொண்டு வந்ததாகவும் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார் பொய்யை மட்டுமே நம்பி வாக்கு கேட்கும் இவர்களை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ள முழு நிதியையும் நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செலவிட்டு உள்ளேன்.

4.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளேன். 2.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடங்கள் கட்டிக் கொடுத்துள்ளேன். 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளேன். 1.48 கோடி மதிப்பீட்டில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலோர கிராமங்களில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளேன். 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளை சீரமைத்து கொடுத்துள்ளேன். 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டிகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலைக் கடைகள், 60 ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரை கிராமங்களில் தடுப்பு சுவர்கள், 27.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை வசதிகள், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, 25.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள்.

மேலும், கொடிய பேரிடர் காலமான கொரோனா களத்தில் பொதுமக்களுக்கு 70 லட்சம் ரூபாய் ஒதுக்கி தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நானும் எனது தந்தையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மத்திய அரசிடம் இருந்து பெற்ற முழு நீதியையும் நமது தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் செலவிட்டு உள்ளேன்.

கொரோனா பேரிடர் காலகட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அரசு வழங்கும் முழு சம்பளப் பணத்தையும் எனது சொந்த பணத்தையும் நமது மாவட்டத்தின் குழந்தைகளின் கல்விக்காகவும், விளையாட்டுக்காகவும் மருத்துவ வசதிக்காகவும் செலவழித்துள்ளேன்.

ஏழை குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக 29.7 லட்சம் ரூபாய் அளித்துள்ளேன். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுத்தொகைக்காக 14.1 லட்சம் ரூபாய் அளித்துள்ளேன்.

தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் ஏழைகளின் அன்னதானத்திற்காக 19 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் மருத்துவ உதவிக்காக 15 புள்ளி 35 லட்சம் ரூபாய் நிதியை அளித்துள்ளேன். மாவட்டத்தில் மருத்துவமனைகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பொருட்கள் வாங்குவதற்காக 7.42 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காக 6.5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏழைகளின் வீடுகளை சரி செய்வதற்காகவும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில், புணரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும், ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்குவதற்காகவும் சுமார் 22 லட்சம் ரூபாய் நிதியை அளித்துள்ளேன். இவ்வாறு அரசு அளித்துள்ள நிதியையும் எனது சொந்த நிதியையும் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் செலவிட்டு உள்ளேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வகையில் ஐந்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி சுமார் 6000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

நமது கன்னியாகுமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தளமாக மாற்றி பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பு வசதிகளையும் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

நமது மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும்.

நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும் இவ்வாறு நமது தொகுதியின் வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். காங்கிரஸ் கட்சி மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை அளித்துள்ளது.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஊக்கத்தொகை இது போன்ற ஏராளமான திட்டங்களை இளம் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் நமது இளம் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ள திட்டங்களை அதிக அளவு நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெற்றுத் தருவேன்.

இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக உங்களில் ஒருவனாக போட்டியிடக் கூடிய விஜயகுமார் (எ) விஜய் வசந்த் ஆகிய எனக்கு உங்களது விலை மதிப்பு மிக்க வாக்குகளை வாக்கு இயந்திரத்தில் வரிசையில் மூன்றில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சின்னமாம் கைச்சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்ய வைக்குமாறு உங்கள் அனைவரையும் பணிவோடும் அன்போடும் பாசத்தோடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *