• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

முதல்வரை தொடர்ந்து அமைச்சருக்கும் கொரோனா !!

ByA.Tamilselvan

Jul 15, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை தொடர்ந்து அமைச்சர் நாசருக்கும் தொற்று உறுதியாகிஉள்ளது.
முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், அமைச்சர் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் நாசர் தனிமைப்பட்டுத்திக் கொண்டுள்ளார்.


இது குறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். எனினும் அமைச்சர் உடல்நிலையில் பெரியளவில் பாதிப்பு இல்லையென அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.