• Sat. Apr 20th, 2024

101-வது பிறந்தநாள் சங்கரய்யாவுக்கு முதல்வர் வாழ்த்து

ByA.Tamilselvan

Jul 15, 2022
  சிபிஎம் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு இன்று 101 வது பிறந்நாளாகும். அவருக்கு முதல்வர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் தகைசால் தமிழர் தோழர். சங்கரய்யாவுக்கு, 101-வது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன். போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *