
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில் சோழிங்கநல்லூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு திலகபாமா செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

2016 ஆம் ஆண்டு எனது தோளில் கட்சியின் துண்டு எதற்காக போட்டேனோ அன்றைய தினத்திலிருந்து பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ எந்த வேலையும் நான் செய்யவில்லை,
அடிமட்ட தொண்டனாக இருந்து பாமக தலைவர் அன்புமணியின் கட்சியின் முன்னிலையில் இருந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்.
கட்சியில் தொண்டனாக இருந்து செயல்படுவதற்கு எந்த சிக்கலும் இல்லை, என்னை நீக்கியது குறித்து நான் எதையும் பார்க்கவில்லை நான் செயல்படும் இடத்தில் இருக்கிறேன்.
