
தென் மேற்கு தீவிரமடைந்து கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து ஏற்பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏராளமானனோர் கும்பக்கரை அருவியில் குவிந்து வந்தனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கூடுதல் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கும்பக்கரையில் தண்ணீர் கொட்டியது. இதனையடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கடந்த 28ஆம் தேதி முதல் குளிக் க தடை விதித்தனர்.
இந்நிலையில் தற்போது சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் 15 நாட்களுக்குப் பிறகு நேற்று அருவியில் குளிக்க அனுமதி அளித்துள்ளனர். அனுமதி அறிவிப்பு சரிவர தெரியாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் குறைவாகவே காணப்பட்டனர் .பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரைக்கு செல்ல எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ளது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்ற பிறகுதான் குளிப்பதற்கு அனுமதி உண்டா? இல்லையா ? என்பதை தெரிய வேண்டியுள்ளது. சில சமயம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே கும்பக்கரை விலக்கு அருகே தடை குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
