• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

நடப்பாண்டில் கூடுதலாக 850 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Byவிஷா

Sep 28, 2021

தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஏற்கனவே மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டு 7 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதனால், மேலும் 850 இடங்களுக்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.


சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது..,
“தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 11 மருத்துவமனைகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் கட்டிட பணிகள் சரிவர முடியவில்லை என்றும் அதனை மீண்டும் மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.


இன்னும் 10 நாட்களில் அந்த கட்டட பணிகள் முடிந்துவிடும். இந்த நான்கு கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவமனைகளில் தலா 150 வீதம் 450 மாணவர்கள் சேர்க்கைக்கும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளுர் ஆகிய இடங்களில் 100மாணவர்கள் என மொத்தம் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் மூலம் தினமும் 50,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் திட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தில் வெளியிடப்பட்ட 110அறிவிப்புகளில் ஒன்றான, கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் நாளை சேலத்தில் தொடக்கி வைக்க இருக்கிறார்.

பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தை, காது,மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் என 16 சிறப்பு துறை மருத்துவருடன் கூடிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆண்டுக்கு 1,240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலம், அம்மா மினி கிளினிக் செயல்பட எவ்வித பாதிப்பும் இல்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அம்மா உப்பு அம்மா கூட்டுறவு வங்கி உள்ளிட்ட திட்டங்கள் பெயரளவில் உள்ளன தற்போது எந்த திட்டமும் செயல்பாட்டில் இல்லை.


இந்த வாரம்(அக்டோபர் 2, ஞாயிறு) 12,500 கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், மெகா தடுப்பூசி திட்டம் இல்லை. அடுத்த வாரம் ஞாயிறு அன்று மிகப்பெரிய அளவில் முகாம் அமைக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.