தமிழகம் முழுவதும் சம்பத்தில் நடத்தப்பட்ட நிலத்தடி நீர் குறித்த ஆய்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து அபாயகரமான அளவாக உள்ளது தெரியவந்தது. இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு கலெக்டர் முருகேஷ் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மாவட்டம் முழுவதும் ஒரே மாதத்தில் 1,121 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக 4 நிறுவனங்கள் உலக அங்கீகார சான்றுகளை சமீபத்தில் வழங்கின.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் உயர நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பெரும்பாலான பண்ணைக்குட்டைகள் நிரம்பி உள்ளன. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது பற்றிய தகவலும் சமீபத்தில் வெளியானது.
இதனை அறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, திருவண்ணாமலை கலெக்டர் முகேஷுக்கு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.