• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வரும் 25ம் தேதிக்கு ஈ.பி.எஸ் மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு

ByA.Tamilselvan

Aug 23, 2022

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் மேல்முறையீடு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதே வழக்கு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த ஈபிஎஸ்சின் மேல்முறையீடு வழக்கு 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. .