• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தற்பொழுது 100 கோடியில் போதை பொருள் வழக்கில் தவெகவினர் கைது…

ByKalamegam Viswanathan

Oct 21, 2026

தவெக ஆட்சி, தூய ஆட்சி, மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றெல்லாம் உத்தரவாதம் தந்தார் முதல்வர் விஜய், தற்போது இந்த 5 மாத காலத்திலே 100 கோடி ரூபாய் கிரிஸ்டல் மெத்தப்பட்டமை போதை பொருள் கடத்தல் வழக்கில் தவெக கட்சியின் செயற்குழு உறுப்பினர் பூபாலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பெரும் அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

பூபாலனுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருப்பதை கண்டறிந்திருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் வரை இந்த வலைப்பின்னல் பறந்து விரிந்திருப்பதை அறிந்து, அதிர்ந்து போயிருக்கிறது அன்னை தமிழகம்.

இது மட்டுமா? இன்னும் தவெக அரசில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் கருத்து கூறும்போது, நீதியரசர் சஞ்சய் குமார், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார், தமிழகத்தைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியதாக தவெகவினர் இணையதளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரத்திலே பிரச்சாரம் செய்தபோது, அந்தக் கூட்டத்தில் அதை முன்மொழிந்து, தவெக அமைச்சர் அருண்ராஜ், உச்ச நீதிமன்றமே தமிழக அரசை பாராட்டி இருப்பதாக குறிப்பிட்டு பேசினார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் சம்பந்தமான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதியரசர் சஞ்சய் குமார், உங்களின் முதல்வர் வேகமாக செயல்பட நினைக்கிறாரே, நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்க கேட்கிறீர்கள்?” என்றுதான் நான் அன்றைக்கு சொன்னேன். ஆனால் அதைத் திரித்து, முதல்வர் விஜயைப் புகழ்ந்ததாக தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களிலே வைரலாக்கி விட்டீர்கள். இந்த நிலையிலே செங்கோட்டையனின் தேர்தல் தொடர்பான வழக்கை நான் விசாரிப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. எனவே இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்” என்று கூறி, அந்த வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்..

நீதி அரசர் சஞ்சய் குமார் தவெக அரசின் சமூக வலைதளங்களுடைய அந்தப் பதிவு, எப்படி உண்மையை அடித்தளமாக வைத்திருக்கிறது என்பதற்கு உச்ச நீதிமன்ற நீதியரசர் இந்த கருத்தே சான்றாக இருக்கிறது.

அத்தனையும் பொய். உண்மை என்பது எதுவுமே இல்லை, சாத்தியம் என்பது எதுவுமே இல்லை. அதற்கான முயற்சி என்பதும் எதுவும் இல்லை. ஆக, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே கட்டமைத்திருக்கிற ஒரு தவெக அரசு, சமூக வலைதளங்களின் வதந்திகளை மட்டும் வைத்து, இந்த அரசு அமைந்திருக்கிறது.

இந்த சமூகத்தில என்ன மாதிரியான தாக்கங்களை எல்லாம் ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு, இந்த சம்பவத்தை நாம் சாட்சியாக எடுத்துக்கொண்டாலும், இன்றைக்கு இவையெல்லாம் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், இப்போது இதைத் தொடர்ந்து அவர்கள் செய்து வருகிறபோது, இப்போது மக்களுக்கு என்ன அச்சம் ஏற்படுகிறது

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றெழுத்து தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், அதன் விளைவாக தமிழகத்தின் 21 மாவட்டங்களிலே கனமழை வெளுத்து வாங்கப் போவதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. உடனடியாக முதல்வர் ஆய்வு செய்கின்ற ரீல்ஸ்கள் எல்லாம் வெளியே வந்திருக்கிறது.

மின்னல் வேகத்திலே மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெறுவதாக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது. தமிழகத்திலே வடகிழக்கு பருவங்களில் தீவிரமடைந்துள்ளது. மழையால் சாலைகளின் நீர் தேங்குதல், போக்குவரத்து பாதிப்பு, தாழ்வான பகுதிகளிலே வெள்ள அபாயம் போன்ற பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் கால்வாய்களை தூறுவார்த்தல், நீர் நிலைகளை பராமரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளை கண்டறிதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது புதிய தவெக அரசு, மழை துவங்கிய பின்தான் இந்த அவசரகால பணிகளை அவசரமாக தொடங்கி இருப்பது இந்த ரீல்ஸ் அரசு இன்னும் ரியலை புரிந்து கொள்ளவில்லையா என்ற கவலை ஏற்படுகிறது.

வெறும் பருவமழைகான எச்சரிக்கை அறிவிப்பதுடன், அரசின் கடமை முடிந்தது என இருந்து விடாமல், தவெக அரசு ,மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாக செயல்படுகின்றனவா, அவசர மீட்பு மற்றும் நிவாரண உதவி குழுக்கள் தயார் நிலையிலே இருக்கின்றனவா, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா, அதற்கு செல்லுகின்ற வழிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை எல்லாம் தொடர் கண்காணிப்பிலே வைத்துக்கொள்ள வேண்டும்.

மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ள இடங்கள், வெள்ளம் சூழக்கூடிய சாலைகள், நீர் நிலைகளின் அருகே உள்ள ஆபத்தான பகுதிகள் ஆகியவற்றின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களிலும், உணவு வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளிட்ட வெள்ளக்கால நிவாரண முகாம்கள் அரசு தயார் நிலையிலே வைத்திருக்க வேண்டும்.

இயற்கை பேரிடரை தடுக்க முடியாது. ஆனால் இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும். மழை வந்த பின்பு மழை நின்ற பின்பு ஆய்வு நடத்துவதை விட, மழை தொடங்குவதற்கு முன்பு மக்களை காக்கும் நிர்வாகமே மக்களின் நம்பிக்கையை பெறும் நிர்வாகமும் இதையெல்லாம் அரசுக்கு அறிவுரையாக சொல்லவில்லை. கடந்த காலங்களிலே அம்மாவின் அரசு ,எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு, பெற்ற அனுபவங்களை களத்திலே பெற்ற அனுபவங்களை கஜா புயலின் போது உயிர் ஒரு உயிரெழுப்பு இல்லாமல் மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது , இது சொந்த புராணம் பாடுவதாக அரசு இந்த கருத்தை தள்ளி வைத்து விடக்கூடாது. இது சொந்த புராணமோ, சுயபுராணமோ, நிச்சயமாக இல்லை. மக்களின் மீது அக்கறையோடு தான் கடந்த கால அனுபவங்களை புதிதாக பொறுப்பேற்றிருக்கிற அரசு, மக்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்கிற அக்கறையோடு தான் இந்த தகவலை சொல்லுகிறோம்.

தவெக அரசு உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் கருத்தையே திரித்து, அதற்கு தலை வைத்து, கால் வைத்து, வால் வைத்து, கை வைத்து, நீங்கள் அந்த சமூக வலைதள பதவிகளை வெளியிட்ட அந்த குட்டு இப்போது உடைந்திருக்கிறது.

ஆகவே, அதுபோன்ற ஒரு செயற்கையான போலியான இல்லாத விளம்பரங்களை தேடுவதை தள்ளி வைத்துவிட்டு, இதுபோன்ற பேரிடர் காலங்களிலே ரீல்ஸை ஒத்தி வைத்துவிட்டு, ரியலிலே களம் இறங்க முன்வரவேண்டும் , இந்த தவெக அரசு என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

ரீல்ஸ் போடுங்கள், இன்ஸ்டாவிலே போடுங்கள், புகழை தேடுங்கள், யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இதுபோன்ற பேரிடர் காலங்களிலே ரீல்ஸை முதலீடாக வைத்து, நீங்கள் ரியலை பின்னுக்கு தள்ளிவிட்டால், மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மிகப்பெரிய பேரிடராக வருகிறபோது, அதிலே நாம் களத்திலே நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய முதன்மையான கடமை அரசுக்கு இருக்கிறது. ஆகவே, ரீல்ஸால் ஆட்சிக்கு வந்தோம், ஆகவே இந்த பேரிடரை ரீல்ஸை முன்னிறுத்துவோம் என்று இல்லாமல், ரீல்ஸை தள்ளி வைத்துவிட்டு, ரியலாக களத்திலே தவெக அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் என்கிற மக்கள் மீது இருக்கிற அக்கறையோடு சொல்லுகிறோம். நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.