• Sun. Oct 13th, 2024

ஆதி, நிக்கி திருமண வைபவம்.. வெளியான கலக்கல் புகைப்படங்கள்..

Byகாயத்ரி

May 19, 2022

தமிழ் திரையுலகில் டார்லிங் படம் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இவர்கள் இருவரும் யாகாவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அவர்களுடன் நெருக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆதி தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நிக்கி கல்ராணி ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றது தகவல்கள் வெளியானது. அதன் பிறகு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக நிக்கிகல்ரானி கூறியிருந்தார். இந்தப் புகைப்படங்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஆர்யா சாயிஷா, மெட்ரோ சிரீஸ் என ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *