

விருதுநகரில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், கொடிமரத்து பள்ளி கே.பி.பி பள்ளி, டிவிஎஸ் பள்ளி, கே.வி.எஸ் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் ஆர்வமாக முன் வந்தனர்.



இந்த முகாமை விருதுநகர் நகர செயலாளர் மாமா முகமது நைனார் அவர்கள் மற்றும் விருதுநகர் நகர இலக்கிய அணி செயலாளர் சந்தோஷ பாண்டியன், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சரவணன் கலந்துகொண்டனர். மேலும் நகர எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் முனியசாமி, இளைஞர் பாசறை துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், தகவல் தொழில் நுட்பப்பிரிவு பால் பாண்டி கலந்து கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து சேர்ப்பதை நேரில் சென்று மேற்பார்வையிட்டனர்.

