

5 ஊர் கிராம மக்கள் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
நாளை மறுநாள் 15 ஆம் தேதி நடக்கும் கோவில் குடமுழுக்கு திருவிழாவை ஐந்து ஊர் கிராம மக்களை அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் தனிநபர் குடமுழுக்கு திருவிழாவில் நிறுத்தக்கோரி ஐந்து ஊர் கிராம மக்கள் சார்பில் உசிலம்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் போடுவார்பட்டி பின்னம் பட்டி சின்னக் குறவன்குடி காமாட்சிபுரம் வெள்ளைக்காரபட்டி மாயனூர் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வழிபட்டு வருகின்றனர்.
போடுவார்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் நாளை மறுநாள் 15ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. எனவே ஐந்து கிராமத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கோவிலை ஆக்கிரமித்து கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர். எனவே 5 ஊர் கிராம மக்களும் சேர்ந்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் வரும் 15ஆம் தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்தை தடுத்து நிறுத்தி அயலூர் கிராம மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென்று உசிலம்பட்டி கோட்டாட்சியர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
