அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
நாடாளுமன்றத்தில் இன்றும் கருப்பு சட்டையில் வந்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரம், ராகுல் தகுதி நீக்கம் குறித்து கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன.
இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 12வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.