• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகை சாவித்திரி நினைவு தினம் இன்று..!

Byகாயத்ரி

Dec 26, 2021

புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம்கொண்ட திறமையாளர் சாவித்திரி.ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். சாவித்திரியின் இயற்பெயர் சரசவாணிதேவி.

சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். 1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் ஜெமினி கணேசனை மணந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார். பெரும் புகழும் இவரை சூழ செம்மையாக வாழ்ந்த இவரின் நிலை சிறிது காலத்திலே படு பாதாலத்தில் இறக்கிவிட்டது.

19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 திசம்பர் 26-ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. இந்திய அரசு அவரின் நினைவாக 2011-ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது.இத்தகைய நடிப்பு நாயகி சாவித்திரி நினைவு தினம் இன்று..!