பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட் -நடிகர் ரன்பீர்கபூருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது எங்களுடைய வாழ்வில் கிடைத்த நற்செய்தி.. இதோ எங்களுடைய குழந்தை.. என்ன ஒரு மாயாவி அவள்.. நாங்கள் சந்தோஷத்தில் திளைக்கிறோம்- ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர். அன்புடன் ஆலியா மற்றும் ரன்பீர் என்று பதிவிட்டுள்ளார்.